×

90 சதவீதம் தேர்ச்சி பெற்று அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

பல்லாவரம்: பல்லாவரம் மறைமலையடிகள் அரசுப் பள்ளியில் மொத்தம் 202 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். இதில், 187 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 93 சதவீதம் தேர்ச்சி விகிதம் ஆகும். இதில், பாத்திமா நோஹா என்ற மாணவி 545 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், கார்த்தீஸ்வரி என்ற மாணவி 536 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், ஆப்ரா என்ற மாணவி 527 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தையும் பிடித்தனர்.
அதேபோன்று, ஜமீன் பல்லாவரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 149 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில் மொத்தம் 136 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 91.3 சதவீதம் தேர்ச்சி விகிதம் ஆகும்.

இதில், வணிகவியல் துறையை சேர்ந்த மாணவி மகேஸ்வரி 498 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், ஞானவாணி 486 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், இசக்கி முத்து என்ற மாணவர் 485 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தையும் பிடித்தனர். அதேபோல, அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மொத்தம் 246 பேர் பொதுத்தேர்வு எழுதியதில், 236 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 96 சதவீதம் தேர்ச்சி விகிதம் ஆகும். இதில், அறிவியல் பிரிவை சேர்ந்த மாணவர் முகமது தாரிக் என்ற மாணவர் 552 மதிப்பெண்கள் பிடித்து பள்ளியில் முதலிடம் பிடித்தார். இவர், கணினி அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

நவீன் என்ற மாணவர் 525 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், தர்ஷினி என்ற மாணவி 520 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தையும் பிடித்தனர். இதுவரை, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 80 சதவீதம் தேர்ச்சி விகிதம் இருந்து வந்த நிலையில், தற்போது 90 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர். ஆதிதிராவிடர் நலப்பள்ளி 92.45 சதவீதம் தேர்ச்சி: மீனம்பாக்கம் அரசினர் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 53 மாணவர்கள் பிளஸ் 2 எழுதினர். இதில் 49 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் 92.45 சதவீத மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணசாமி, உதவி தலைமை ஆசிரியை சசிகலா ஆகியோர் தெரிவித்தனர்.

The post 90 சதவீதம் தேர்ச்சி பெற்று அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Pallavaram Thiramalayadigar Government School ,Fatima Noha ,Dinakaran ,
× RELATED இன்ஜினியர் வீட்டில் 60 சவரன் கொள்ளை